உலகுக்கு வெளியே வியப்பூட்டும் மாரத்தான்

ஐரோப்பா மற்றும் மேற்காசியா பகுதியில் வாழ்ந்த கிரேக்கர் - பாரசீகர் இடையே, மாரத்தான் என்ற இடத்தில், கி.மு.490ல் பெரும் போர் நடந்தது. இதில், பாரசீகர்கள் தோற்கடிக்கப்பட்டனர். இந்த தகவலைத் தெரிவிக்க, கிரேக்க நாட்டின் ஏதென்ஸ் அரண்மனைக்கு ஓடினான் ஒரு வீரன்; மன்னரிடம் தகவலை தெரிவித்ததும், மயங்கி விழுந்து இறந்தான்.
இந்த வீரன் பெயர் பெயிப்பிடிஸ். அவன் ஓடிய நிகழ்வு ஓவியமாக்கபட்டது. அதை இன்றும் காணலாம். இதன் பின்னணியில் தான் மாரத்தான் போட்டி துவங்கி, உலகமே வியக்கும் வண்ணம் வளர்ந்துள்ளது. முக்கியமாக சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்த உலகம் முழுவதும் நடத்தப் படுகிறது.
மாரத்தான் போட்டி துாரம், 42.195 கி.மீ., கொண்டது; ஓடியோ, நடந்தோ கடக்க வேண்டும். இதில் பாதி துாரம் ஓடுவது அரை மாரத்தான். பல மாரத்தான்களை ஒரே மூச்சில் ஓடிக் கடக்கும் போட்டிகளும் உண்டு.
மாரத்தான் போட்டி, 1896 முதல் ஒலிம்பிக் விளையாட்டில் இடம் பெற்றுள்ளது. பெண்கள் பங்கேற்கும் மாரத்தான், அமெரிக்கா, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், 1984ல் கோடைகால ஒலிம்பிக் போட்டியில் துவங்கப்பட்டது.
* ஐரோப்பிய நாடான ஜெர்மனி, பெர்லின் நகரில், 2007ல் நடந்த மாரத்தானில், ஆப்ரிக்க நாடான கென்ய வீரர் எலியட் கிபோகோஜி, போட்டி துாரத்தை, 2:00 மணி; 01 நிமிடம்; 39 வினாடிகளில் கடந்ததே சாதனையாக உள்ளது
* ஒலிம்பிக் போட்டி - 2008ல் கென்ய வீரர் வான்ஜூரு, மாரத்தான் துாரத்தை, 2:00 மணி; 06 நிமிடம்; 32 வினாடிகளில் கடந்ததே சாதனையாக உள்ளது.
ஆப்ரிக்க நாட்டு வீரர்களே, மாரத்தானில் பரிசுகளைக் குவிக்கின்றனர்.
பலவகை மாரத்தான் போட்டிகளைப் பார்க்கலாம்.